2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஐந்து கொங்கிறீட் வீதிகளுக்கான வேலைஆரம்பம்

ஏ.எம்.ஏ.பரீத்   / 2017 நவம்பர் 19 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா  பைசல் நகர்ப் பகுதியில்,  சுமார் ஐம்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான  ஐந்து கொங்ரீட் வீதிகளுக்கான ஆரம்ப வேலைகளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அல்ஹாஜ் அப்துல்லா மகரூப்பினால் நேற்று  (18)  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிண்ணியா முன்னாள் நகர சபை ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர் கட்சித் தலைவரான எம்.டீ.ஹாரீஸின் வேண்டுகோளுக்கிணங்க இவ் வேலைத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பைசல் நகருக்கான உத்தியோகபூர்வ காரியாலயமும் திறந்துவைக்கப்பட்டது.

இதன்போது  எம்.டீ.ஹாரீஸ் கருத்து தெரிவிக்கையில்,

எமது மண்ணுக்காக தேர்தலுக்கு முன் பாரிய வேலைத் திட்டங்களும், அபிவிருத்திகளும் செய்வதற்கான முன்னேற்பாடுகளை காரியாலய உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இது வாக்குறுதிக்கான நேரமில்லை, வாக்குறுதிகளை நிறைவேற்றும் நேரம் எனவே வாருங்கள் எமது கிராமத்தை வளப்படுத்துவோம் எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X