Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூலை 11 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில், ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தில் ஒசுசல மருந்து விற்பனை நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார அமைச்சரை சுகாதார அமைச்சில் சனிக்கிழமை (09) சந்தித்துக் கலந்துரையாடியபோதே இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் ஒசுசல மருந்து விற்பனை நிலையம் இல்லாமையால், அம்மாவட்ட மக்கள் மருந்துகளை நியாய விலையில் பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். மேலும், சில மருந்துகளைப் பெறமுடியாத நிலையில் அவர்கள் உள்ளமை தொடர்பிலும் சுட்டிக்காட்டியதாகவும் அவர் கூறினார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர், 'திருகோணமலை மாவட்ட மக்களின் நலன் கருதி ஒசுசல மருந்து விற்பனை நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதாக உறுதியளித்தார்.
இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .