2025 மே 19, திங்கட்கிழமை

ஒன்றரை வருடமாக தலைமறைவாகியிருந்தவர் கைது

Thipaan   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹதிவுல்வெவ பகுதியில், ஒன்றரை வருட காலமாக 05 வழக்குகள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரொருவரை, இன்று அதிகாலை (23) கைது செய்துள்ளதாக மொறவௌ பொலிஸார் தெரிவித்தனர்.

மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.எம்.ஞானக பிரசாத் திஸாநாயக்க (30 வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

24 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகளைத் திருடியமை, 14,666 ரூபாய் பெறுமதியான உழவு இயந்திரத்தின் பாகங்களைத் திருடியமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, சட்டவிரோதமான மீன்பிடி வலைகளைத் தம்வசம் வைத்திருந்தமை, 42,000 ரூபாய் பெறுமதியான மாடுகளைத் திருடியமை போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக, மொறவெவ பொலிஸ் நிலையத்தினால் திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஷ்வானந்த பெர்ணான்டோ முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, சட்டவிரோதமான மீன்பிடி வலைகளை தம் வசம் வைத்திருந்தமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அக்குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சந்தேகநபருக்கு, ஐயாயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறும் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை மொறவெவ பொலிஸ் நிலையத்துக்குச் சென்று கையொப்பமிடுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

தொடர்ந்தும் மற்றைய வழக்குகளுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டமையினால், மற்றைய வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X