Princiya Dixci / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, புல்மோட்டைப் பகுதியில் ஒருவரைத் தாக்கி காயப்படுத்திய நபரை, நாளை 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ஹயான் மீ ஹககே, நேற்று திங்கட்கிழமை (04) உத்தரவிட்டார்.
புல்மோட்டைப் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் தங்கையைக் காதலிக்கும் நபரைத் கோபத்தில் தாக்கிக் காயப்படுத்தியதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரை புல்மோட்டைப் பொலிஸார் கைதுசெய்து திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை புல்மோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago