Princiya Dixci / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் சாரயம் குடித்து விட்டு வீதியின் நின்று ஒழுங்கீனமாக நடந்துகொண்ட நபரொருவரை, இம்மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குச்சவெளி பதில் நீதிமன்ற நீதிவான் ஹயான் மீ ஹககே, நேற்று வெள்ளிக்கிழமை (05) உத்தரவிட்டார்.
செந்தூர், மதுரங்குடா பகுதியைச் சேர்ந்த பழணியாண்டி செல்வராசா (வயது 49) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் கடற்றொழில் மேற்கொள்வதற்காக வேண்டி திருகோணமலை குச்சவெளிப் பகுதியில் சென்று, இவ்வாறு சாராயம் குடித்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை, கடந்த வியாழக்கிழமை (04) மாலை கைதுசெய்து குச்சவெளி நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026