2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஓடிய பஸ்ஸில் சில்மிஷம்: இராணுவச் சிப்பாய்க்கு விளக்கமறியல்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

கல்ஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பஸ்ஸில் வைத்து, பாலியல் சில்மிஷம் செய்த குற்றச்சாட்டில் கைதான இராணுவ சிப்பாயை, நாளை 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க, நேற்றுச் சனிக்கிழமை (27) உத்தரவிட்டார்.

திருகோணமலையில் கடமையாற்றும்  38வயதுடைய இராணுவ வீரரே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கந்தளாய் சர்வோதயத்திற்கு அருகில் வசித்து வரும்    பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை

கந்தளாயிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸில், குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு அருகில் அமரந்த இராணுவச் சிப்பாய், பாலியல் சில்மிஷம் செய்ததாக, கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, வியாழக்கிழமை (25) மாலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.     

குறித்த நபரை விசாரணைகளின் பின்னர் கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில், நேற்று (27) ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.         


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X