அப்துல்சலாம் யாசீம் / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, ஹொரவப்பொத்தானை, மிகிந்தபுர பகுதியில், ஓட்டோவொன்று, இன்று (08) காலை விபத்துக்குள்ளானதில், கடற்படை வீரர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன், ஓட்டோ மோதியதாலேயே, இவ்விபத்து இடம்பெற்றுள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.
மொரவெவ பகுதியிலிருந்து திருகோணமலை கடற்படை முகாமுக்கு ஓட்டோவில் குடும்பத்தாருடன் சென்ற கடற்படை வீரர் உள்ளிட்ட மூவரும், குறித்த விபத்தில் காயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் மொரவெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய கடற்படை வீரரான பிரதீப் சுரங்க, அவரது மனைவியான ரசிகா நிலந்தி, இரண்டு வயதுக் குழந்தையான தஸ்ரி ஆகிய மூவருமே காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பாக விசாரணைகளை, உப்புவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .