2026 மார்ச் 23, திங்கட்கிழமை

கைக்குண்டு வீச்சு; இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, நான்காம் கட்டைப் பகுதியிலுள்ள  வீடொன்றின் மீது கைக்குண்டு வீசப்பட்டமை தொடர்பில் 40, 44 வயதுகளையுடை இரண்டு பேரை சந்தேகத்தின் அடிப்படையில்  இன்று திங்கட்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

முச்சக்கரவண்டிச் சாரதியொருவரினுடைய வீட்டின் மீதே ஞாயிற்றுக்கிழமை (14) இரவு கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. இவ்வாறு வீசப்பட்ட கைக்குண்டு வீட்டில் பட்டு வெடித்துள்ளது. இதன்போது உயிர் ஆபத்து எதுவும் ஏற்படவில்லையென்பதுடன், வீட்டுக்கு சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த அசம்பாவிதத்துக்கு தனிப்பட்ட பிரச்சினை காரணமென விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .