2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கெக்கிளாய் மீனவரின் பிரச்சினை தொடர்பில் பிரேரணை முன்வைப்பு

Kogilavani   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம், வடமலை ராஜ்குமார்.

திருகோணமலை, கொக்கிளாய் மீனவர்கள், அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்த வழியின்றி இருப்பதாக, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 73ஆவது சபை அமர்வு, தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில், இன்று  செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்றது.

சபை அமர்வில் கலந்துகொண்ட அவர், கொக்கிளாய் – புல்மோட்டை களப்பு சிறுகடல் மீனவர்,  மீன்பிடி தொழிலில் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாக, பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.

அங்கு மேலும் கூறிய அவர்,

“திருகோணமலை மாவட்டத்தின் கொக்கிளாய், புல்மோட்டை மக்கள், மீன்பிடியில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். இதனை நாளாந்த செய்திகளில் அறியக்கூடியதாக இருக்கின்றது.

கொக்கிளாய் களப்பில் திருகோணமலை மாவட்ட மீனவர்கள், மீன் பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இது ஒரு பாகுபாடான செயற்பாடாகும். இவ்விடயத்தில், மீன்பிடித் திணைக்களம், கடற்றொழில் திணைக்களமும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

கட்டுவலைகளை பயன்படுத்தி, மீன் பிடிப்பது, திருகோணமலை கரையோர மீனவர்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது.

ஆனால், வேறு மாவட்ட மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுகின்றார்கள். இது   அடிப்படை உரிமை  மீறலாகும்.  இதற்காக   விசேட நியதிச் சட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு, மத்திய மீன் பிடி அமைச்சு, இது விடயத்தில் அக்கரை செலுத்த வேண்டும்” என்றார்..

மீனவர்களின் பிரச்சினையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சின் கவனத்துக்கு கொண்டுச் செல்வதாக, சபையின் தவிசாளர் சந்திரதாச கலப்பதி கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X