2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கைகலப்பில் இருவர் காயம்; இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                   

திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்திபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாலை இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் படுகாயமடைந்த இரண்டு பேர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
மதுபானத்தை அருந்திவிட்டு இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது. இதன்போது,  பொல்லால் தாக்கி காயங்கள் ஏற்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X