2025 மே 16, வெள்ளிக்கிழமை

குச்சவெளியில் வெடிபொருட்கள் மீட்பு

Gavitha   / 2017 ஜனவரி 15 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

குச்சவெளியில் நீலபனிக்கன்ராய் வாவி பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீலபனிக்கன்ராய் வாவி பிரதேசத்திலிருந்து குறித்த வெடி பொருட்களை புல்மோட்டை பொலிஸ் விசேட படையணி முகாம் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

விசேட படையணி முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்னர்.

இதன்படி, 60 மில்லிமீற்றர் வகையான 4 மோட்டார் குண்டுகள், 89 மில்லிமீற்றர் வகையான 11 அருள் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மீட்கப்பட்ட வெடி பொருட்கள் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .