2025 மே 20, செவ்வாய்க்கிழமை

காட்டுக்குள் அத்துமீறி விறகு வெட்டச் சென்றவர் கைது

Princiya Dixci   / 2016 ஜூலை 02 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

திருகோணமலை, சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக காட்டுக்குள் அத்துமீறி விறகு வெட்டச் சென்ற குற்றச்சாட்டில் கந்தளையயைச் சேர்ந்த 40 வயதுடைய நபரை,  நேற்று வெள்ளிக்கிழமை (01 ) மாலை 05.30க்கு கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து விறகு வெட்ட வைத்திருந்த கோடரியையும் கைப்பற்றியுள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவித்தனர்.

காட்டில் மரங்களை வெட்டுவதாகப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து அவ்விடத்துக்கு விரைந்து பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பில் குறித்த நபரிடம்  விறகு வெட்டும் கோடரி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் சூரியபுர பொலிஸார் குறித்த நபரை சூரியபுர காட்டில்  வைத்து கைதுசெய்தனர்.

குற்றமிழைத்த நபருக்கு, பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் 07ஆம் திகதி கந்தளாய் நீதிவான் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் எடுக்கப்படுவதாக சூரியபுர பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X