Kogilavani / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.புஹாரி
திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் உதவி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இக்பால்நகர் மீள்குடியேற்ற கிராமத்துக்குள் நேற்று இரவு உட்புகுந்த காட்டு யானைகள், குடியிருப்புக்களையும் சேனைப் பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இக்கிராம மக்கள் கடந்தகால யுத்த சூழ்நிலையின் போது தமது இருப்பிடங்களை விட்டுவெளியேறி, மீண்டும் இரண்டு வருடங்களுக்கு முன் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறினர். சேனைப் பயிர்ச் செய்கை செய்து தமது ஜீவனோபாயத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமது குடியிருப்புக்களையும் சேனைப் பயிர்களையும் காட்டு யானைகள் தொடர்ந்து துவம்சம் செய்யுமாக இருந்தால் தாம் பொருளாதார ரீதியாக பெரும் கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டி வரும் என கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
காட்டு யானைகளால் 3 குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மரவெள்ளி, கச்சான், சோளம் போன்ற சேனைப் அழிக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் கிராம சேவகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சேனைப் பயிர்ச் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026