2025 மே 20, செவ்வாய்க்கிழமை

காட்டு யானையின் தாக்குதலில் வைத்தியசாலை சேதம்

Thipaan   / 2016 ஜூன் 14 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா, பொன் ஆனந்தம், ஏ.எம்.ஏ.பரீட்

திருகோணமலை, மொறவௌ பிரதேச  சுகாதாரப் பராமரிப்பு வைத்தியசாலை திங்கட்கிழமை (13) இரவு காட்டு யானையின் தாக்குதலால் சேதமடைந்துள்ளது.

இதன்போது, வைத்தியசாலையின் 11 ஜன்னல்கள், 03 கதவுகள் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளதுடன்,  மருந்துப்பொருட்கள் வீசி எறியப்பட்டுள்ளதாகவும் மேற்படி வைத்தியசாலையின்; வைத்திய அதிகாரி போல் ரொஷன் தெரிவித்தார். 

காட்டு யானைகளின் தொல்லை மற்றும் வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வருகின்ற இவ்வைத்தியசாலையில் கடமையாற்றுவதற்கு பலர் மறுப்புத் தெரிவிக்கும் நிலையில்,  தற்போது நியமிக்கப்பட்டுள்ள வைத்திய அதிகாரி பொதுமக்களின் உதவியுடன்  அபிவிருத்திகளை மேற்கொண்டு வந்தார்.

நோயாளர்களின்  வருகை அதிகளவில் காணப்படும் இவ்வேளையில், உடனடியாக இவ்வைத்தியசாலையை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியிலுள்ள மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X