Princiya Dixci / 2016 ஜூன் 10 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்
திருகோணமலை, மூதூர் கிழக்கிலுள்ள கிராமங்களான பாட்டாளிபுரம், நல்லூர், வீரமாநகர், இளக்கந்தை மற்றும் நீலாக்கேணி ஆகிய கிராமங்களுக்கு குடிநீர்வசதி இல்லை. எனவே, தற்போது எற்பட்டுள்ள வரட்சி காரணமாக தாம் பாதிக்கப்படுவதாக இக்கிராமத்தின் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், இன்று வெள்ளிக்கிழமை (10) காலை 09 மணியளவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.
நீண்டகாலமாக இப்பகுதி நிலத்தடி நீர் உவர்த் தன்மையாக காணப்படுவதனால் ஓர் இரு கிணற்று நீரே குடிப்பதற்கு உகந்ததாக உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக இந்த கிணறுகளும் வற்றி வருகின்றன. இதனால் எமக்கான குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்குத் தீர்வு பெற்றுத்தர வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
பாட்டாளிபுரம் கிராமத்தில் நீர்தாங்கியொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து குடிநீரை வழங்கப் பல முயற்சிகள் மேற்கொண்டு வந்துள்ள போதும் இங்குள்ள உள் வீதிகள் பலவற்றுக்கு குடிநீர் குழாய்கள் பதிக்கப்படாமல் உள்ளதால் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பைப் பெற அதிகமான பணம் தேவைப்படுகிறது.
யுத்தத்தில் இடம்பெயர்ந்து பல துன்பங்களை அனுபவித்து மீளக்குடியேறியுள்ள நாம், அன்றாடம் கூழித் தொழிலை மேற்கொண்டு எமது வாழ்வாதாரத்தைத் தேடும் போது பெருமளவு பணத்தைச் செலவிட்டு எவ்வாறு தனியான இணைப்பைப் பெறமுடியும் என இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எவ்வாறாயினும் திருகோணமலை மாவட்டத்தின் உட்கட்டுமான அபிவிருத்தியில் உட்கட்டுமானத்துக்கென 100 மில்லியன் ரூபாயும் குடிநீர் திட்டத்துக்கென 100 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக 14.5 மில்லியன் ரூபாய் மூதூர் பிரதேச செயலகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago