2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

குடும்பஸ்தர் மீது தாக்குதல்

Niroshini   / 2016 மே 31 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வயலில் வைத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில், குடும்பஸ்தர் ஒருவர் இனந் தெரியாத நபர் ஒருவரினால் தாக்கப்பட்டு மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூர் - சிராஜ் நகரைச் சேர்ந்த மீராசாஹிப் அய்யுப்கான் (வயது 56) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

வயலுக்கு தண்ணீர் செலுத்துவதில் பச்சநூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் ஏற்பட்ட முரண்பாடே இத்தாக்குதல் சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .