Niroshini / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் 10 வருடங்களுக்குப் பின்னர் மீள்க்குடியேறியுள்ள குடும்பங்கள், தமது காணிகளின் எல்லைகளை அடையாளம் காண்பதில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.
ஏற்கெனவே, அந்த பகுதியில் கடற்படை முகாம் அமைந்திருந்த காரணத்தினால் சகல காணிகளும் ஒரு தொகுதியாக காணப்படும் நிலையில், தனித் தனியாக காணிகளின் எல்லையை அடையாளம் காண்பதில் காணி உரிமையாளர்களிடையே அவ்வப்போது முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
இந்த முரண்பாடுகள் கைகலப்பாக மாறிய நிலையில் தாக்குதலுக்குள்ளான இரு பெண்கள் உட்பட நான்கு பேர் இதுவரையில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.
மார்ச் மாதம் 25ஆம் திகதி சம்பூர் பிரதேச மக்கள் மீள் குடியேற்றத்துக்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில் தற்போது அங்கு தமது பழைய இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.
மீளக்குடியேறியுள்ள குடும்பங்கள் தங்கள் காணிகளையும் குடியிருப்பு நிலங்களையும் அடையாளம் கண்டுள்ளபோதிலும் எல்லைகளை அடையாளம் காண்பதில் அவர்களிடையே அடிக்கடி முரண்பாடுகள் ஏற்படுவதாக பிரதேச சமூக ஆர்வலரான ஆர்.ரவிந்திரன் தெரிவித்தார்.
'காணி எல்லை தொடர்பாக மக்களிடையே சச்சரவுகள் இருந்தாலும் கணிசமான பிரச்சினைகளுக்கு உள்ளூர் தலைவர்களினால் சுமுகமான முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது. தீர்வு காணப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்தின் உதவி தேவைப்படுகின்றது' என்றும் அவர் தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago