2025 மே 19, திங்கட்கிழமை

கிண்ணியா, மூதூர் வைத்தியசாலைகளுக்கு ரூ. 5 மில். செலவில் சி.சி.டி.வி கமெராக்கள்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

கிண்ணியா, மூதூர் தள வைத்தியசாலைகளுக்கு 05 மில்லியன் ரூபாய் செலவில் சி.சி.டி.வி கமெராக்களைப் பொருத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளரும் சுகாதார பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ் தெரிவித்தார்.

இரு வைத்தியசாலைகளின் தலைமை வைத்திய அத்தியட்சகர்கள் தன்னிடம் விடுத்த வேண்டுகோளினையடுத்து, தான் இவ்விடயம் தொடர்பாக  பிரதி அமைச்சர் பைசல் காசிமிடம்  கோரிக்கை விடுத்ததற்கிணங்க, அவரின் விசேட நிதியிலிருந்து ஒதுக்கீடு  செய்துள்ளார் என, பாயிஸ் தெரிவித்தார்.

இதன்மூலம் இவ்விரு வைத்தியசாலைகளும் நவீனத்துமுடையதாக மாற்றமடையுமெனவும் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X