Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனத் தெரிவித்தும் தமக்கு வாழ்வாதார உதவிகளைச் செய்து தருமாறு கோரியும், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், இன்று புதன்கிழமை (26) நடை பவனியொன்றை மேற்கொண்டனர்.
காலை 9 மணிக்கு பட்டித்திடல் பிள்ளையார் ஆலயத்தில் மத வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர், அங்கிருந்து மூதூர் பிரதேச செயலகம் வரை 9 கிலோமீற்றர் தூரம் நடைபவனியாகச் சென்று ஒவ்வொருவரும் தனித்தனியாக மூதூர் உதவி பிரதேச செயலாளர் எம்.தாஹீரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரைக் கையளித்தனர்.
மூதூர் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நடைபவனியில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் போது, 'அரசே, காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளையும் கணவன்மார்களையும் மீட்டுத்தா', 'அரசேஈ எமது உறவுகள் எம்முடன் சேர்ந்து வாழ உதவி செய்', 'அரசே, எமக்கு வாழ்வாதார உதவிகளைச் செய்துதா', 'அரசே, எமது பிள்ளைகள் கல்வி கற்பதற்கு உதவி செய்', 'இதுவரையும் வாழ்வாதார உதவிகளைச் செய்யாமைக்குக் காரணம் என்ன?' போன்ற வாசகங்களை ஏந்தியவாறு மூதூர் பிரதேச செயலகம் வரை நடை பவனியாகச் சென்றனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago