2026 மார்ச் 23, திங்கட்கிழமை

காணாமல் போன மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, கும்புறுப்பிட்டி கடற்கரையில் ஆணொருவரின் சடலம்,  இன்று சனிக்கிழமை (20) காலை 10.30க்கு மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 16ஆம் திகதி, இரண்டு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றதாகவும் அவ்விருவரும் 17ஆம் திகதி வரை வீட்டுக்கு வரவில்லை என துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறு காணாமல் போன இருவரில் ஒருவரின் சடலமே, இன்று மீட்கப்பட்டதாகவும் சடலமாக மீட்கப்பட்டவர், திருகோணமலை - அபயபுரப் பகுதியைச் சேர்ந்த ரோகன நிசாந்த முனவீர (வயது 44) எனவும் பொலிஸார்  தெரிவித்தனர்.

குறித்த மீனவர், இறுதியாக நீல நிற மேல் அங்கி மற்றும் நீல நிறக் காற்சட்டை அணிந்திருந்ததாகத் தெரியவருகின்றது.

சடலம், தற்பொழுது கும்புறுப்பிட்டி கடற்கரையிலிருந்து சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை குச்சவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .