2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

காணாமல் போனோருக்காக ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2017 மார்ச் 06 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீஷான் அஹமட்

கடந்த கால யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக் கண்டுபிடிக்குமாறு கோரி உவர்மலையில் இடம்பெறும் சுழற்சி முறையிலான உணவுத் தவிப்புப் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் மூதூர், பாரதிபுரம் சிவன் கோவிலுக்கு முன்பாக இன்று (6) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.  

மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த காணாமல் போனோரின்  உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

காணாமல் போன தமது உறவினர்களைக் கண்டுபிடிக்கும்வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X