Niroshini / 2017 பெப்ரவரி 11 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார், பொன்ஆனந்தம்
குமாரபுரம் படுகொலைச் சம்பவம். எமக்கு நன்கு பரீட்சையமுள்ள இராணுவத்தினரால் தான் நிகழ்த்தப்பட்டது என குமாரபுர கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை - குமாரபுரம் படுகொலையின் 21ஆவது நினைவஞ்சலி நிகழ்வு, இன்று குமாரபுரத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட 26 பேருடைய புகைப்படங்கள் அஞ்சலிக்காக வைத்து நினைவுத்தீபம் ஏற்றி பூக்கள் துாவி அஞ்சலி செலுத்தப்ட்டது.
மேலும் 26 பேரின் பெயர்கள் அடங்கிய கல்வேட்டு ஒன்றும் திறைநீக்கம் செய்து வைக்கபட்டது. அத்துடன், “குமுறல் மாறாத குருதிமண் குமாரபுரம் எனும்” தலைப்பிலான ஊடக செய்திகள் கட்டுரைகள் அடங்கிய நூல் ஒன்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.சற்சிவானந்தத்தால் தொகுத்து வெளியிடப்பட்டது.
இதேவேளை, இந்த நினைவேந்தலை முன்னிட்டு, குறித்த மக்கள் சார்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மகஜரிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
அந்த மகஜரில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
இந்த படுகொலைச் சம்பவம் எமக்கு நன்கு பரீட்சையமுள்ள இராணுவத்தினரால் தான் நிகழ்த்தப்பட்டது. அதனை முதூரிலும் அநுராதபுரத்திலும் பொலிஸ் மற்றும் நீதிமன்ற விசாரணைகளில் தெட்டத்தெளிவாக குறிப்பிட்டு, குறித்தவர்களை அடையாளமும் காட்டியுள்ளோம்.
அந்தப் படையினர் மதுபோதையில் சட்டம், நீதி, பாதுகாப்பு ஒழுங்குக்கு மாறாக செய்யப்பட்ட நீதி மீறல் படுகொலையாகும். நாம் தமிழ் மக்கள் என்ற வேறுபாடு காரணமாகவே நிகழ்த்தப்பட்டன.
நடந்த விசாரணைகள் அனைத்தும் குற்றம் சாட்டப்பட்ட படையினரின் உயரிய நலன் கருதியே நிகழ்த்தப்பட்டன. அதனை தீர்ப்பும் யூரி சபையின் தீர்மானமும் நன்குணர்த்தியுள்ளன. எம்மை இந்த நாட்டின் மக்களாக அரசாங்கமும் அதிகாரிகளும் கருதவில்லை.
எமது சாட்சியங்களை சுதந்திரமாக வழங்குவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பதற்கு இந்த வழக்கு அனுராதபுரத்தில் நடத்தப்பட்டமை சான்றாகும். அதனை திருகோணமலைக்கு மாற்றுமாறு கோரினோம் அதுவும் இடம்பெறவில்லை.
விசாரணைகள் நடைபெற்ற காலத்தில், எமது கிராமத்தில் பாதுகாப்பான சூழல் இருக்கவில்லை. எங்களுடன் யார் பேசினாலும் அதனை புலனாய்வு அதிகாரிகள் கண்காணிக்கும் நிலமையையே இருந்தது. அதற்கான பல அழுத்தங்கள் இருந்தது.
இந்த அடிப்படையில் நம்பிக்கை இழந்து 19 வருடங்களாக களைப்புற்ற நாம், மாறி வந்த நல்லாட்சி அரசியலிலும் அதன் ஜனாதிபதி மீதும் நம்பிக்கை வைத்தோம். அதனால் நம்பிக்கையை ஏற்படுத்தி கொண்டு சற்று நீதிகிடைக்கும் என்ற நப்பாசையில், இறுதி விசாணைகளில் பங்குகொண்டோம். ஆனால், நல்லாட்சியிலும் அதே நீதி அமைப்புத்தான் உள்ளது. என்பதனை முடிவுகள் தெளிவாக்கிவிட்டன.
எனவே எமக்கு தங்கள் நீதி அமைப்புகள் மீது நம்பிக்கை மீளவும் இல்லாமல் போயுள்ளன.
21 வருடங்கள் கழிந்த நிலையிலும், குமாரபுர கிராமத்தை சின்னாபின்னமாக்கப்பட்ட இந்த சம்பவத்தில், நீதிதான் கிடைக்கவில்லை. எமக்கு என்ன புனர்வாழ்வு, என்ன நட்டஈடு, என்ன ஆறுதல்கள் செய்யப்பட்டன.? அதற்கான ஒஓர் இம்மியளவான முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. நாம் ஒவ்வொரு நாளும் கண்ணீர் விடுவதுதான் வாழ்க்கையாகியுள்ளன.
நீங்கள் 69ஆவது சுதந்திர தினச்செய்தியில் சொன்னது போன்,று எல்லா மக்களையும் சமத்துவமாக மதிப்பதாக இருந்தால், எமது பாதிப்புக்குரிய நீதி, நிவாரணம், நட்டஈடு, மறு வாழ்வு வழங்கி எமது மனக் கவலைகளை இறக்க நீங்கள் முன்வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025