Niroshini / 2016 மார்ச் 01 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா
திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி பகுதியில் 850 கிரேம் கேரளா கஞ்சாவுடன் 58 வயதுடைய வயோதிபரை போதை ஒழிப்பு பிரிவினர் இன்று (01) காலை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நிலாவெளி - அடம்போடவெட்டை பகுதியைச் சேர்ந்த தேவ சகாயகம் ஜோன் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே, அவரது வீட்டிலிருந்து கேரளா கஞ்சாவை மீட்டதாகவும் அவை மன்னாரிலிருந்து கொண்டு வரப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை இன்று திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago