2026 மார்ச் 23, திங்கட்கிழமை

கொலை சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு சிறைத் தண்டனை

Niroshini   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

கடந்த 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலை, வெள்ளைமணல் பகுதியில் கத்தியால் ஒருவரை வெட்டிக் கொலை செய்த ஒருவருக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை (09) ஏழு வருட கடுழிய சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

திருகோணமலை, வெள்ளைமணல்,கரடிப்பூவ பகுதியைச் சேர்ந்த கந்தசாமி ஈஸ்வரன் (வயது 49) என்பவருக்கே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மணல் பகுதியில் கசிப்பு வடிசாராயம் காய்த்து விற்பனை செய்து வந்த நிலையில் பொலிஸாருக்கு காட்டிக்கொடுத்ததாகக் கூறி புதுமாதாஸா அன்டனிதாஸ என்பவரை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சீனக்குடா பொலிஸாரினால் குறித்த நபருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டது.

இதில்  குறித்த நபரை குற்றவாளியாக இணங்கண்ட திருகோணமலை நீதிமன்ற நீதிபதி சசிமகேந்திரன், அவருக்கு ஏழு வருட கடுழிய சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .