George / 2016 பெப்ரவரி 11 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரச்சோலை கடற்கரையில் நீராடச் சென்ற மூன்று பேரில் ஒருவரை காணவில்லை என குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை பிற்பகல் 04.55 மணியளவில் நண்பர்களுடன் கடல் குளிக்கச் சென்ற 02ஆம் வட்டாரம், இரனகேணியைச் சேர்ந்த பாலசுந்தரம் சுபாகரன் (16 வயது ) ஆகிய தனது மகன், வீடு திரும்பவில்லை என தந்தையான கனகசபை பாலசுந்தரம் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் .
அதனையடுத்து, பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து, நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக கூறப்படும் இளைஞனை தேடும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026