Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, கம்பகொட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை குளவிகளின் கொட்டுக்கு உள்ளாகிய ஆறு பேர் மகாதிவுள்வெவ கிராமிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி பகுதியில் உணவகமொன்றுக்கு அருகில் அமைந்துள்ள வளவில் காணப்பட்ட மரமொன்றிலிருந்த குளவிக் கூட்டை வளவு உரிமையாளர் உடைத்துள்ளார். இதன்போது, அக்கூட்டிலிருந்து கலைந்துவந்த குளவிகள் உணவகத்திலிருந்த இவர்களைக் கொட்டியுள்ளன.
ரொட்டவெவப் பகுதியைச் சேர்ந்த எம்.ரிஸ்வி (வயது 37), மகாதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்தவர்களான கருணாதிலக (வயது 36), சம்பத்குமார (வயது 27), கண்டி, தென்னங்கும்புர பகுதியைச் சேர்ந்தவர்களான லொறிச் சாரதியான தம்மிக சஞ்சீவ (வயது 41), அவரது உதவியாளரான எச்.ரம்சீன் (வயது 30), மயிலகுடாவ பகுதியைச் சேர்ந்த சரத் கால்லகே (வயது 51) ஆகியோரே பாதிக்கப்பட்டுள்ளனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026