2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

குளவிக்கொட்டினால் மூவர் பாதிப்பு

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, மயிலகுடாவௌ பகுதியில் இன்று (17) காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தந்தை, தாய், மகன் ஆகிய மூவரும் வீட்டுக்குப் பின்புறமாக இருந்த வளாகத்தில் காணப்பட்ட புளியமரத்தை வெட்டிக்கொண்டிருந்தனர். அப்போது, அம்மரத்திலிருந்த குளவிக்கூடு உடைந்த நிலையில் கலைந்துவந்த குளவிகள் இவர்களைக் கொட்டியுள்ளன.

உடனடியாக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .