Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Niroshini / 2017 மார்ச் 22 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
"கிழக்கு மாகாணத்தில் பெருகிவரும் டெங்கு நுளம்பைக் கட்டுபடுத்துவதற்கு, எம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்குவோம்" என, வட மாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் பெருகிவரும் டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தும் முகமாக, வடக்கு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்கள் இடையே இன்று விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீருடன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் தொடர்பினை மேற்கொண்டு, கிழக்கு மாகாணத்தில் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு, தாம் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
"கிழக்கு மாகாணத்துக்கு, குறிப்பாக கிண்ணியா பிரதேச மக்களுக்கு, உதவ நாம் தயாராக உள்ளோம்" என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட ஆளணிப் பிரச்சினைகள் தொடர்பாகவும், வைத்தியசாலைக்குத் தேவையான பொருட்கள் தொடர்பாகவும் தெரிவித்ததைத் தொடர்ந்து, மிக விரைவில் இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவுள்ளதாக, வட மாகாண அமைச்சர் உறுதியளித்தார்.
“என்னைத் தொடர்புகொண்டு, இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் இன்று மிகப்பிரச்சினையாக மாறியுள்ள டெங்கு தொடர்பில், என்னைத் தொடர்புகொண்டு உதவிகளை வழங்க முன்வந்த வடமாகாண சபை சுகாதார அமைச்சருக்கு, நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
4 hours ago
6 hours ago