Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 மார்ச் 02 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில், ஏ.எம்.ஏ.பரீத்
கிழக்கு மாகாணத்தில், கடந்த இரண்டு மாதங்களில், 1,421 பேர், டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
இதற்கமைய, திருகோணமலை மாவட்டத்தில் 824 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 510 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 87 பேருமே, இக்காய்ச்சலாம் பீடிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சு கூறியது.
இதில், டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு, திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவோரில், கடந்த நான்கு தினங்களுக்குள் மூவர் உயிரிழந்துள்ளனர். கிண்ணியா பிரதேசத்தில், டெங்குக் காய்ச்சலினால் உயிரிழந்தோர் தொகை, இதுவரை நான்காக அதிகரித்துள்ளது. அத்துடன், 400க்கும் மேற்பட்டோர், டெங்குக் காய்ச்சல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், டெங்கு நுளம்பு பெருகுவது தொடர்பான விரிவான ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக கிழக்கு மாகாணத்துக்கு, மேல்மட்ட டெங்கு ஆராய்ச்சிக் குழு வரவுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
குறித்த குழு, கிழக்கு மாகாணத்தில் பணிகளை முன்னெடுத்து, கிழக்கு மாகாணத்தில் டெங்கினைக் குறைத்து, மக்களை அதிலிருந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும், இதனைச் சீர்செய்வதற்கு, விசேட திட்டங்களை அமுல்படுத்தி செயற்படுத்துவதாகவும், வைத்தியசாலைக்கு சில இயந்திரங்களைக் கையளிக்கவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
இதேவேளை, திருகோணமலை நகரில், தனியாரினால் நடத்தப்படும் மேலதிகக் கல்வி நிலையங்களையும் முன்பள்ளிகளையும், தற்காலிகமாக இடைநிறுத்துமாறு திருகோணமலை பொதுச்சகாதார அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது, டெங்கு நுளம்புகள் பரவும் நிலமைகள் அதிகம் காணப்படுவதனால் மறு அறிவித்தல்வரை மேற்படி நிலயங்களை தற்காலிகமாக மூடிவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான கடிதங்கள் தனியார் கல்வி நிலயங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதுடன், பொது அறிவித்தல்களும் விடுக்கப்பட்டுள்ளன.
18 minute ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
6 hours ago
7 hours ago