2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

Thipaan   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட், எம்.முபாரக்

நிரந்தர சமாதானத்தையும் தேசிய நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தலில் ஊடகங்களின் வகிபங்கு எனும் தொனிப்பொருளில், கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் (13, 14) வதிவிட செயலமர்வு பொலன்னறுவை ரமதா விடுதியில் நடைபெற்று வருகிறது.                                

இதில், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். 

நேற்றுச் சனிக்கிழமை(13) இடம்பெற்ற இச்செயலமர்வு, இன்று ஞாயிற்றுக்கிழமையும் (14) இடம் பெற்றது. இதில் நிலைமாற்று நீதி மற்றும் புரிந்துணர்வு இன்மை, மக்களின் கருத்துக்களுக்கு தாக்கம் செலுத்தக்கூடிய விடயங்கள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

யு எஸ் எயிட் நிறுவனமும் சட்டம் மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதியமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இச்செயலமர்வில், சட்டத்தரணி எம்.ஜங்கரன், சிரேஷ்ட ஊடகவியலாளர் சிறி பிருந்தகன் ஆகியோரினால் விரிவுரைகள் வழங்கப்பட்டன.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .