Kogilavani / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
'கிழக்கு மாகாணத்துக்கான வரவு-செலவு திட்டத்தில், மாகாண கல்வியமைச்சுக்கான நிதி குறைக்கப்பட்டமை கவலைக்குறிய விடயமாகும். அத்துடன் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை' என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் வரவு-செலவுத்திட்ட நிதி அறிக்கைக்கான விவாதம், மாகாண சபையில் திங்கட்கிழமை (21)தவிசாளர் சந்திரதாஸ கலப்பத்தி தலைமையில் நடைபெற்றது. விவாதத்தின் பின் உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 'கிழக்கு மாகாணத்தின் பதினேழு கல்வி வலயங்களில் மூதூர் மற்றும் கல்குடா கல்வி வலயங்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளன. இவ்வாறான கல்வி வலயங்களை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி குறைவாகவே காணப்படுகின்றது.
அத்தோடு கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் மழை காலங்களில் சில பாடசாலைகள் வெள்ள நீரில் மூழ்கின்றன. இம்மாவட்டத்தில் 30 பாடசாலைகள் தற்காலிக கொட்டில்களில் இயங்கி வருகின்றது. 13 பாடசாலைகள் வகுப்பறைகள் இன்றி இயங்கி வருகின்றன. இதனை மேம்படுத்த வேண்டும்.
திருகோணமலை மாவட்டத்தில் தோப்பூர் சாஹிரா வித்தியாலயம், கந்தளாய் பேராற்று வெளி முஸ்லிம் வித்தியாலம், குச்சவெளி அந்நூர் மகா வித்தியாலயம், திருகோணமலை ஜமாலியா, சாகிரா மகா வித்தியாலம் போன்ற பாடசாலைகள் பாரிய வளப்பற்றாக் குறைகளுடன் இயங்கி வருகின்றன. இதனை கல்வி அமைச்சர் கவனத்தில் எடுத்து சீர்செய்ய வேண்டும்.
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ளவர்கள் திருகோணமலை மாவட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டாலும் அவர்கள் மூன்று மாதங்களுள் இடமாற்றம் பெற்று சொந்த இடங்களுக்கு திரும்விடுகின்றனர்.
இது கவலைக்குறிய விடயமாகும். ஆசிரியர்களை நியமிக்கும்போது உரிய மாவட்டங்களில் உள்ளவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்' என்றார்.
3 minute ago
37 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
37 minute ago
42 minute ago