2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண சபை அமர்வு ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

கிழக்கு மாகாண சபை அமர்வை தவிசாளர் சந்திரதாச கலபதி ஒரு மணி நேரம் ஒத்திவைத்துள்ளார்.

மாகாண சபை அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை கூடியது. இதன்போது, சபை அமர்வுக்கு ஆளும் கட்சி சார்பாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் உட்பட ஐந்து  உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.

எதிர்க்கட்சி சார்பாக முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்;வை உட்பட மூன்று  உறுப்பினர்கள் மாத்திரமே பிரசன்னமாகியிருந்தனர்.

இந்நிலையில், 37 உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாண சபையில் எட்டு உறுப்பினர்கள் மாத்திரம் கலந்துகொண்டமையால் தவிசாளர் சபை அமர்வை ஒரு மணி நேரம் ஒத்திவைத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .