2025 மே 16, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான நிதியை அதிகரிக்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை ஏழு மில்லியன் ரூபாயாக அதிகரிக்குமாறு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்துள்ளார்.

மாகாண சபையின் அமர்வு, செவ்வாய்க்கிழமை (21) காலை ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிலையில், மதியபோஷன இடைவேளைக்குப் பின்னர்  மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்ன தலைமையில் சபை அமர்வு மீண்டும் ஆரம்பமாகியது.

இதன்போது, அமர்வில் மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் இல்லாததன் காரணமாக சபை அமர்வு இன்று (22) காலை 9 மணிவரை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் ஆரம்பமாகியது.    

இது தொடர்பான தனிநபர் பிரேணையை சமர்ப்பித்து உரையாற்றியபோதே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,  சப்பிரகமுவ மாகாணத்தில் 50 மில்லியன் ரூபாயுடன் உறுப்பினர்களுக்கு வாகன வசதி உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றது.

தற்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு 4 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்படுகின்றது. எமது மகாண சபை விரைவில் கலையும் நிலையில் இருக்கின்ற காரணத்தாலும் மக்களுக்கான  பல வேலைத்;திட்டங்கள் செய்ய வேண்டியுள்ளமையாலும்  மாகாண சபை உறுப்பினர்களுக்கான நிதியை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே, இந்த வருடத்தில் இவர்களுக்கான  பன்முகப்படுத்தப்பட்ட நிதியை அதிகரித்து வழங்க வேண்டும்' என்றார்.  

இதற்குப் பதிலளித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், 'நிதி நிலைமையை ஆராய்ந்து சாதகமான முடிவு எடுக்கப்படும், ஏற்கெனவே பல திட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும்,  அவற்றுக்கான நிதி இன்னும் கிடைக்காமல் உள்ளது' என்றார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .