2026 மார்ச் 23, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா, எப்.முபாரக்

தங்களுக்கு நிரந்தர நியமனம் பெற்றுத் தருமாறு கோரி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட  தொண்டர் ஆசிரியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு மாகாணத்தில் யுத்தம், சுனாமி, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட  அனர்த்தங்கள் நிலவிய காலப்பகுதியில் எதுவித வேதனமும் இன்றிக் கடமையாற்றியதுடன், ஆசிரியர் பற்றாக்குறை நிலவிய அரசாங்கப் பாடசாலைகளில் சுமார் 15 முதல் 20 வருடங்கள் கடமையாற்றிய தமக்கு இதுவரை காலமும் நிரந்த நியமனம் வழங்கப்படவில்லையென கிழக்கு மாகானா தொண்டர் ஆசிரியர் சம்மேளனத் தலைவர் ஆர்.ஜெயமோகன் தெரிவித்தார்.

மேலும், கடந்த 09 மாதங்களாக கிழக்கு மாகாண சபையும் முதலமைச்சரும் தங்களை ஏமாற்றி வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .