2025 மே 19, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன வயதெல்லை 40ஆக அதிகரிப்பு

Niroshini   / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.எ.பரீத், எப்.முபாரக்

கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன வயதெல்லை 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதென கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ தனக்கு அறிவித்துள்ளதாக திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பாக தற்போது விண்ணப்பம் கோரப்பட்டடுள்ளது. எனினும், வயதெல்லை 35 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிகமான பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வயதெல்லையை அதிகரிக்குமாறு  கிழக்கு மாகாண ஆளுநருக்கு தான் அனுப்பிய கடித்துக்கான பதிலிலேயே ஆளுநர் இந்த விடயத்தை தனக்கு தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்  மகரூப் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X