2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண முதலமைச்சர் - கனேடிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

Thipaan   / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட், பொன் ஆனந்தம், எப்.முபாரக்,ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், வடமலை ராஜ்குமார்,வடிவேல் சக்திவேல் 

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி விட்டிங் மற்றும் கிழக்கு மாகாண முதமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு,  முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்றுப் புதன்கிழமை (26) நடைபெற்றது.

யுத்ததால் அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் ஒன்றான கிழக்கு மாகாணத்தில் வசிப்பவர்களின்  வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, மீள்குடியேற்ற செயற்பாடுகள் மற்றும் அரசியல் யாப்பில் அதிகாரப் பங்கீடு தொடர்பான  கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் யுத்ததால் பாதிக்கப்பட்டு அங்கவீனமானவர்கள், கணவனை இழந்தோர் மற்றும் இடம்பெயர்ந்நதவர்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவது தொடர்பில், கனேடிய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டது.

அதேவேளை, கிழக்கின் சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்துககு கனடா உதவிகளை வழங்கி வரும் நிலையில் அதனை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பிலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று  மாவட்டங்களிலும் ஆங்கில மொழிக் கற்கை நிலையங்கள் மற்றும்  தகவல் தொழில்நுட்ப நிலையங்களை உருவாக்குவது தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .