Princiya Dixci / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
- பதுர்தீன் சியானா
சிங்கப்பூர் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் எஸ்.சந்திரதாஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) காலை 10.00 மணியளவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட்டைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, கிழக்கு மாகாணத்தின் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தும் சிங்கப்பூரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டபடி கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதனையும் உயர்ஸ்தானிகர் வலியுறுத்தினார்.
மேலும், அவர்கள் அதனைத் திட்டமிட்டபடி வருகின்ற ஏப்ரல் அல்லது மார்ச் மாதமளவில் ஆரம்பிப்பதற்கு உத்தேசித்துள்ளமை தொடர்பில் உரையாடப்பட்டதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026