2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

கிழக்கு மாகாணக் கல்விப் பிரிவு அதிகாரிகள் வெளிநாடு பயணம்

Princiya Dixci   / 2016 ஜூன் 11 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

கிழக்கு மாகாணக் கல்விப் பிரிவைச் சார்ந்த உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவினர், இன்று சனிக்கிழமை (11) இரு வாரங்களுக்கான வெளிநாட்டுப் பயணம் ஒன்றினை மேற்கொள்கின்றனர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 வலயக் கல்விப் பணிப்பாளர்களும் திருகோணமலை மாவட்டதில் ஒரு வலயக் கல்விப் பணிப்பாளரும் நீங்களாக 13 வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உட்பட பிரதம கணக்காளர், மாகாணக் கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவினரே இப்பயணத்தினை மேற்கொள்கின்றனர்.

இவர்கள் ஒரு வார காலத்துக்குப் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கும் மேலும் ஒரு வாரத்துக்கு தாய்லாந்துக்கும் செல்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X