Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்
கிழக்கு மாகாண சபை அமர்வை 10 நிமிடங்களுக்கு மாகாண சபைத் தவிசாளர் சந்திரதாச கலபதி ஒத்திவைத்தார்.
மாகாணசபை அமர்வு திருகோணமலை மாவட்டத்திலுள்ள மாகாண சபை அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை கூடியது.
இதன்போது, கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் தொடர்பான பிரேரணையை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் முன்வைத்து சபை அனுமதியையும் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து தேசிய சுதந்திர முன்னணியின் மாகாண சபை உறுப்பினர் ஜெயந்த விஜயசேகர, 10 நிமிடங்களுக்கு சபையில் தான் உரையாற்றுவதற்கு அனுமதி கோரினார். இருப்பினும், அனுமதி கிடைக்காமையை அடுத்து குறித்த மாகாணசபை உறுப்பினர் மேசையின் மீது நின்று தான் உரையாற்றுவதற்கான அனுமதி கட்டாயம் தர வேண்டுமென்று சத்தமிட்டார்.
இதனைத் தொடர்ந்து சபை அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026