2025 ஜூலை 26, சனிக்கிழமை

கிழக்கு மாகாணத்தில் ஆடைத் தொழிற்சாலைகள்?

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்

கிழக்கு மாகாணத்தில் பிரதேசங்கள் ரீதியாக ஆடைத் தொழிற்சாலைகளை அமைக்கும் திட்டத்தைப்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபை அமர்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மிக விரைவில் கிடைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிச்சலுகையைப் பயன்படுத்தும் வகையில்  இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்குமாறு கோரி இத்திட்டத்தை  சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

நகரங்களிலேயே  தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன. எனவே, பிரதேசங்களில்; காணப்படும் வளங்களைப் பயன்படுத்தி ஆடைத் தொழிற்சாலைகளை நிறுவுவது தொடர்பில் பிரதமருடன் விரைவில் தான் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X