Princiya Dixci / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, திரியாய் பகுதியில் 15 சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பாடசாலையின் காவலாளியை, எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவனராஜா, இன்று செவ்வாய்க்கிழமை (15) உத்தரவிட்டார்.
புல்மோட்டை 01ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த முஹம்மது சாஹிபு நசுர்தீன் (28) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், நேற்று திங்கட்கிழமை (14) கோயிலுக்குச் சென்ற சிறுமியை, பலவந்தமாக மோட்டார்சைக்கிளில் ஏற்றிச்சென்றிருந்த போது காட்டுப்பகுதியில் வைத்து கிராமமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
சிறுமி, வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
34 minute ago
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
39 minute ago
50 minute ago