Niroshini / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல் சலாம் யாசீம்
திருகோணமலை பட்டணம் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வியாங்குளம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை காவலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
பட்டணம் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான அருணாச்சலம் டேவிட் (வயது 57) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர்,திங்கட்கிழமை(07)மாலை அலுவலகத்துக்கு விளக்கேற்றிவிட்டு வருவதாக கூறிச்சென்றவர் இரவு வரை வீடு திரும்பாததையடுத்து,அவருடைய மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார்,திணைக்களத்தின் காவலாளி அறையிலிருந்து குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago