Suganthini Ratnam / 2017 ஜனவரி 06 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொன் ஆனந்தம்
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கங்குவேலி அகத்தியர் ஸ்தாபன சிவன் ஆலயத்துக்கு அருகில்; இன்று தமது மேட்டுநிலக் காணியில்; துப்புரவு பணியில் ஈடுபட்ட விவசாயிகள் மூவரை சேருநுவரப் பொலிஸார் அழைத்துச் சென்றதால், குழப்பமான நிலைமை ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கங்குவேலி விவசாய சம்மேளனம் தெரிவித்தது.
மேற்படி மேட்டுநிலக் காணியில் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் பொருட்டு விவசாயிகள் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, அங்கு வந்த சேருநுவரப் பொலிஸார், இம்மூன்று விவசாயிகளையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இது தொடர்பில் மேற்படி பொலிஸாருக்கு கிடைத்த தவறான தகவலின் அடிப்படையிலும் மேலும், அக்காணியில் கனரக வாகனத்தைப் பாவித்தமை தொடர்பிலும் இவ்விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இருப்பினும், இவ்விவசாயிகள் விசாரணையின் விடுவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நிலைமை சுமூகமாகியதாகவும் அச்சம்மேளனம் தெரிவித்தது.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025