2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Thipaan   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைபறிச்சான், அம்மன் நகர்  பிரதேசத்தில், கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை சம்பூர் பொலிஸார் நேற்றிரவு (29) முற்றுகையிட்டுள்ளனர்.

இதன் போது, கசிப்பு உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் 20 லீற்றர் கோடா உட்பட ஏனைய மூலப் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

அத்தோடு இங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த ஜெகதீசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், இந்தப்  பிரதேசத்தில் உள்ள மகாவலி கங்கை ஆறு ஓடுகின்ற அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் நீண்ட காலமாக இயங்கி வருகின்ற இந்த கசிப்பு நிலையம் தொடர்பாக  தமக்கு கிடைத்த  இரகசியத் தகவலை அடுத்தே இந்த இடம் சுற்றி வளைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X