2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

கசிப்பு வடித்த இருவர் கைது

Princiya Dixci   / 2016 ஜூன் 17 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, அதியமென்கேணி கங்கைப்பகுதியில் வடிசாராயங்களை வடித்துக்கொண்டிருந்த இருவரை, நேற்று வியாழக்கிழமை (16) மாலை கைதுசெய்துள்ளதுடன், சாராயம் வடிக்க அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சேருநுவரப் பொலிஸார் தெரிவித்தனர்.

10 வருடங்களுக்குப் பிறகு விற்பனைக்காக மேற்கொள்ளப்பட்ட பாரியளவிலான சம்பவம் இது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிவெட்டி- பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர்கள் இருவரரயும், மூதூர் நீதிமன்றத்தில் இன்று (17) ஆஜர்படுத்தவுள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சேருநுவரப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X