2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கசிப்பு நிலையம் முற்றுகை

Editorial   / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சங்குளம் பகுதியில் இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம், இன்று (15) அதிகாலை முற்றுகையிடப்பட்டபோது, அங்கிருந்து பெருந்தொகை கசிப்பு, கசிப்பு காய்ச்சப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு, 47 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, கசிப்பு 22,500 மில்லி லீற்றர் கசிப்பு, கசிப்புக்  காய்ச்சப் பயன்படுத்தப்படும் கோடா 1 இலட்சத்தி 7,000 மில்லி லீற்றர், சுற்று வயர் என்பனவும் கைப்பற்றபட்டுள்ளன.

சம்பூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் சம்பூர் பொலிஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை, மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X