Princiya Dixci / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இக் கைது, கிண்ணியா பொலிஸ் பிரிவில் இறால் குழிப் பகுதியில் இன்று (01) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றதாக, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி சந்திர குமார தலைமையில் உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி சனுஸன், பொலிஸ் உத்தியோகத்தர்களான அத்துக்கோரளை தௌபீக், மகரூப் மற்றும் இந்தீக ரூஹினி ஆகியோர் மேற்கொண்ட தேடுதலில், இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், கிண்ணியா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நாளை மறுதினம் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago