2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Thipaan   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தான 4ஆம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரை, 04 கிராம் கஞ்சாவுடன், நேற்று (14) மாலை கைது செய்யதுள்ளதாக, தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் பிரகாரம், முள்ளிப்பொத்தானை 4ஆம் வாய்க்கால் பகுதியில் பொலிஸார் நடத்திய சுற்றி வளைப்பில், குறித்த நபரிடம் கஞ்சா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவரிடமிருந்து, கஞ்சா கைப்பற்றப்பட்டதோடு, அவரும் கைது செய்யப்பட்டதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபர், பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை, கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .