2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கஞ்சாவுடன் நபர் கைது

Princiya Dixci   / 2017 ஜனவரி 08 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூரங்கல் பகுதியில் 01 கிலோ 90 கிராம் கேரளக் கஞ்சாவுடன், 40 வயதுடைய நபரெருவரை, சனிக்கிழமை (07) இரவு, கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர், பல மாதங்களாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக, கிண்ணியா பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து, கஞ்சாவை விற்க முற்படும் போது அவர் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X