Princiya Dixci / 2016 மே 01 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, ஜமாலியாப் பகுதியில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) பிற்பகல் 1 மணியளவில் நால்வரைக் கைதுசெய்துள்ளதாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், ஜமாலியா, லவ்லேன் மற்றும் உப்புவெளிப் பகுதிகளைச் சேர்ந்த 30, 38, 56 மற்றும் 60 வயதுடையவர்கள் எனவும் இவர்களிடம் 02 கிலோகிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்ற விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், விசாரணைகள் முடிவடைந்தவுடன் சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
7 minute ago
9 minute ago
17 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 minute ago
17 minute ago
38 minute ago